874 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் 874 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் அருகே செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 9-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கி விழாவை நடத்தி வைத்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் டாக்டர் பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத்தின் கல்லூரி வளர்ச்சி குழுமத்தின் டீன் டாக்டர் சிவக்குமார் பங்கேற்று 874 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
விழாவில் 80 முதுகலை பட்டமும் 794 இளங்கலை பட்டமும் வழங்கப்பட்டு இந்தப்பட்டியலில் முதலிடம் பெற்ற 6 மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
27 மாணவர்கள் தரவரிசையில் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்றனர். அவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை பல்கலைக்கழக வளர்ச்சி குழுமத்தின் டீன் சிவக்குமார் வழங்கி வாழ்த்தினார்.. நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் அயாஸ் அஹமது, ஜெனித் மிஸ்ரியா, ஸ்டாலின் மற்றும் தமிழ் துறை பேராசிரியர்கள் பாலமுருகன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். விழா ஏற்பாடுகளை அனைத்து துறை பேராசிரியர்கள்-பேராசிரியைகள் மற்றும் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.