எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய தாமதம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் -வெங்கடேசன் எம்.பி. தலைமையில் நடந்தது


எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய தாமதம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் -வெங்கடேசன் எம்.பி. தலைமையில் நடந்தது
x

வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை


வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புறநகர் மாவட்ட குழு சார்பில் நடை பயணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வெங்கடேசன் எம்.பி. பேசும்போது கூறியதாவது, மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி என்பது மத்திய அரசின் ஒப்பந்த குளறுபடியால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கீடு செய்த பின்னும் மத்திய அரசு நிதியினை ஒதுக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது.

மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங்கிடம் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அவர் அங்கு இரவு நேர விமான சேவை இல்லை என்று கூறினார். அப்படி என்றால் இரவு நேர விமான சேவையை ஏற்படுத்துங்கள் என்று கூறினோம். இரவு நேர விமான சேவை ஏற்படுத்த வேண்டும் என்றால் அங்கு இரவு நேர பாதுகாப்பு பணிக்கு பாதுகாப்பு படை இல்லை. அதனால் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடியாது என மத்திய அரசு காரணம் கூறுகிறது.

உதவித்தொகை

மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவு ஒதுக்கீடுக்கான தொகை குறைவாக உள்ளது. கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கான உள்நாட்டு வரி மிகவும் குறைவாக உள்ளது. அதற்கான கணக்கினை நாடாளுமன்றத்தில் கூற சொன்னால் அதை சொல்ல மறுக்கிறார்கள். இப்படி பெரும் நிறுவனங்களுக்கு அள்ளி கொடுக்கும் மத்திய அரசின் இதுபோன்ற திட்டங்களை கண்டித்தும் மதுரை மாவட்ட வளர்ச்சிக்காக மதுரை புறநகர் மாவட்ட குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 3 நாட்களாக நடைபயணம் நடத்தி மக்களை சந்தித்து வந்துள்ளார்கள். மதுரை மாவட்டத்தின் வளர்ச்சி தென் மாவட்டத்தின் வளர்ச்சியாகும். அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர்ந்து போராடும்.

வருகிற 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் தென் மாவட்ட மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story