மேம்பாலம் கட்டும் பணி தாமதம்
பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி தாமதமாக நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி தாமதமாக நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேம்பாலம் கட்டும் பணி
கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரியநாயக்கன்பாளை யம் வண்ணான் கோவில் பிரிவில் இருந்து எல்.எம்.டபுள்யூ. பிரிவு வரை ரூ.80 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி நடை பெற்று வருகிறது.
இதற்காக காங்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்து உள்ளன.
இதையடுத்து அந்த காங்கிரீட் தூண்களின் மேல்தளம் அமைக் கும் பணி நடைபெற உள்ளது.
கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவ தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
2, 4 சக்கர வாகனங்கள்
மேட்டுப்பாளையம் ரோட்டில் மேம்பால பணி நடைபெறுவ தால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளன. அந்த வகையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளை யம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஜோதிபுரத்தில் இருந்து எம்.ஜி.ஆர்.நகர், விவேகானந்தபுரம், குப்பிச்சிபாளையம் ரோடு, ெரயில்வே பீடர் ரோடு வழியாக எல்.எம்.டபுள்யூ. பிரிவில் மேட்டுப்பாளையம் ேராட்டை அடைந்து செல்கின்றன.
அது போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வரும் 4 சக்கர வாகனங்கள் ராஜூ நகர், சாமிசெட்டிபாளையம், கூடலூர், எல்.எம்.டபுள்யூ. வழியாக வருகின்றன.
அது போல் 2 சக்கர வாகனங்கள் வண்ணான்கோவில் பிரிவில் இருந்து பெரு மாள் கோவில், இர்வின் சாலை வழியாக வருகின்றன.
குடிநீர் வினியோகம் பாதிப்பு
இந்த மாற்றுப்பாதைகளில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இதனால் அந்த வழியாக வாகனங்கள் வரும் போது போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
கனரக வாகனங்கள் செல்வதால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதம் அடைகின்றன. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வது பாதிக்கப்படுகிறது.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் விஷ்வபிரகாஷ் கூறியதாவது:-
சாலைகள் பழுதானது
கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் மேம்பாலம் அமைக் கும் பணி நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன.
இதனால் அங்குள்ள சாலைகள் மற்றும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து விடுகின்றன. மெயின் ரோட்டிலும் பிரதான குடிநீர் குழாய்கள் உடைந்து விடுகின்றன.
இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பிரச்சினை ஏற்படுகிறது. ஆனாலும் போர்க்கால நடவடிக்கை எடுத்து சாலை மற்றும் குடிநீர் குழாய்களை சரி செய்து வருகிறோம்.
கலெக்டர் அறிவுரை
மேலும் பழுதடைந்த மாற்று சாலைகளையும் செப்பனிட்டு தர கோரி நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளரிடம் நேரிலும், கடிதம் மூலமும் வலியுறுத்தினோம். மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் நடத்திய கலந்தாய்வு கூட்டத்திலும் வலியுறுத்தினோம்.
அதன்பேரில் அவர், பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால பணிகளை பார்வையிட்டு அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பணிகளை முடிக்க வேண்டும்
பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைெபறுவதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்கின்றன. இதனால் அந்த ரோடுகள் சேதமடைந்து உள்ளன.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. குடிநீர் குழாய்கள் உடைந்து விடுகின்றன. இதை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்தாலும் மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
மேலும் மேட்டுப்பாளையம் ரோடும் சேதமடைந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது.
எனவே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பழுதடைந்த ரோடுகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் தனி கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.