பழனி முருகன் கோவிலில் தரிசன டிக்கெட் வழங்குவதில் தாமதம்


பழனி முருகன் கோவிலில் தரிசன டிக்கெட் வழங்குவதில் தாமதம்
x

பழனி முருகன் கோவிலில் அறநிலையத்துறையின் இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் தரிசன டிக்கெட் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

திண்டுக்கல்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம், ரோப்கார், மின்இழுவை ரெயில் பயணம் மற்றும் கோவில் தங்கும் விடுதி என அனைத்து விதமான சேவைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாமிர்தம், பிரசாதம் ஆகியவற்றையும் ஆன்லைன் மூலம் பெறும் வசதி உள்ளது. இவை அனைத்தும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இணையதளம் மூலம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை இணையதள சர்வர் பாதிக்கப்பட்டது. இதனால் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தரிசனம், பிரசாதம் டிக்கெட் மற்றும் இதர சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி பழனி முருகன் கோவிலில், சாமி தரிசன டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர். இதேபோல் மின்இழுவை ரெயில் நிலையத்தில் காலை 6 மணி முதல் 6.30 வரை பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் காத்திருக்க நேர்ந்தது. அதன் பின் இணைய சேவை தொடங்கியது.


Next Story