பெண் கொலை வழக்கில் துப்பு துலங்குவதில் தாமதம்


பெண் கொலை வழக்கில் துப்பு துலங்குவதில் தாமதம்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:30 AM IST (Updated: 4 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவை பீளமேட்டில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர்
கோவை


கோவை பீளமேட்டில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.


பெயிண்டிங் காண்டிராக்டர்


கோவை பீளமேடு சேரன்மாநகர் பாலாஜி நகர் பேஸ் - 2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி (வயது 41). இவர்களின் மகள் கார்த்திகா (16). ஜெகதீஷ்வரி தினமும் தனது மகளை பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று விட்டு வருவது வழக்கம்.


ஜெகதீஸ்வரி, கடந்த 28-ந்தேதி காலை தனது மகளை ஸ்கூட்ட ரில் பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்தார். மாலையில் அழைத்து செல்ல தாய் வருவார் என்று கார்த்திகா பள்ளியில் காத்திருந்தார். ஆனால் மாலை 5.30 மணி ஆகியும் தாய் வராததால் கார்த்திகா வீட்டுக்கு நடந்து வந்தார்.


கழுத்தை நெரித்து கொலை


அப்போது வீட்டின் கதவு சாத்தப்பட்டு இருந்தது. இதனால் அவர் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார். அங்கு படுக்கை அறையில் ஜெகதீஸ்வரி பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.


இதை அறிந்த பீளமேடு போலீசார்,உதவி கமிஷனர் பார்த்திபன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், ஜெகதீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலி மற்றும் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மல் ஆகியவை மாயமாகி இருந்தது. ஜெகதீஸ்வரியை யாரோ கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.


90 பேரிடம் விசாரணை


இந்த கொலையில் துப்புதுலக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. முதலில் இந்த கொலை நகைக்காக நடைபெற்றதாக கருதப்பட் டது. ஆனால் தற்போது வேறு காரணங்களுக்காகவும் கொலை நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


எனவே அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இதுவரை 90 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை துப்புதுலங்க வில்லை. சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை நடத்தப் பட்டது. ஆனால் கொலை நடந்தபோது அந்த நபர் அங்கு இல்லை என்பது உறுதியானதால் அவர் விடுவிக்கப்பட்டார்.


செல்போன் அழைப்புகள்


இந்தநிலையில் ஜெகதீஸ்வரியின் செல்போனுக்கு வந்த அழைப்பு களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பெரும்பாலான போன் கால்கள் வாட்ஸ்-அப் கால்களில் பேசியதும் அழிக்கப் பட்டு இருப்பதும் தெரியவந்தது. எனவே செல்ேபான் அழைப்பு களின் அடிப்படையில் துப்பு துலக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.


பெண் கொலை செய்யப்பட்டு ஒருவாரம் ஆகியும் இன்னும் துப்பு துலங்காதது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Next Story