குற்றாலத்தில் தாமதமாகும் சீசன்


குற்றாலத்தில் தாமதமாகும் சீசன்
x

குற்றாலத்தில் சீசன் தாமதமாவதால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தென்காசி

தென்காசி:

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் அருவிகளில் தண்ணீர் கொட்டும். சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இந்த சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சீசன் இதுவரை தொடங்கவில்லை. வழக்கமாக தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் குற்றாலத்தில் சாரல் மழை பெய்யும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் கேரள மாநிலத்தில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. குற்றால சீசன் ஜூன் மாதத்தில் 19 நாட்களாகியும் இன்னும் தொடங்கவில்லை. இதனால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இங்கு உள்ள வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். குளிர்ந்த காற்று மட்டுமே தற்போது வீசி வருகிறது. ஐந்தருவியில் 2 கிளைகளில் சுமாராக தண்ணீர் விழுகிறது. மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் மிகவும் குறைவாக தண்ணீர் விழுகிறது.


Next Story