மின்னணு வாக்கு எந்திரங்கள்பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பு


மின்னணு வாக்கு எந்திரங்கள்பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பு
x

தேர்தலில் பயன்படுத்தப்பட்டு தற்போது உபயோகத்தில் இல்லாத மின்னணு வாக்கு எந்திரங்களை பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணியை கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலில் உபயோகப்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய வாக்கு எந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மின்னணு வாக்கு எந்திரங்களில் தற்போது உபயோகத்தில் இல்லாத மின்னணு வாக்கு எந்திரங்களான பேலட் யூனிட்-26, கட்டுப்பாட்டு கருவிகளான கண்ட்ரோல் யூனிட்-43, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யக்கூடிய விவிபேட் கருவிகள்- 227 ஆகியவற்றை பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்புவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பு

இதையடுத்து இந்த எந்திரங்களை பெல் நிறுவனத்திற்காக அனுப்பி வைப்பதற்காக நேற்று முன்தினம் மாலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த சேமிப்பு கிடங்கு மாவட்ட கலெக்டர் மோகனால் திறக்கப்பட்டது.

பின்னர், தற்போது உபயோகத்தில் இல்லாத அந்த மின்னணு வாக்கு எந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்காக தேர்தல் துணை தாசில்தார் தண்டபாணி மூலமாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் செந்தில், விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், மற்றும் பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் சுகுமார், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story