!-- afp header code starts here -->

பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பெயர் விடுபட்ட டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் - டிடிவி தினகரன்


பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பெயர் விடுபட்ட டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் - டிடிவி தினகரன்
x

பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பெயர் விடுபட்ட டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் பெயர் விடுபட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையைக் கவனித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்தே வேளாண் பயிர்க்காப்பீட்டில் அலட்சியம் காட்டி வரும் தி.மு.க அரசு, இதிலும் கோட்டை விட்டுவிடக்கூடாது" என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story