முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை திரும்ப பெற வலியுறுத்தல்
முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும் என்று ஆதித்தமிழர் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி
ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், தேனியில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முல்லைஅழகர் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் விஸ்வைகுமார், மாநில பொருளாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும். அருந்ததிய மக்களுக்கான உள் இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story