ஆபத்தான இரும்பு கம்பிகளை அகற்ற கோரிக்கை


ஆபத்தான இரும்பு கம்பிகளை அகற்ற கோரிக்கை
x

ஆபத்தான இரும்பு கம்பிகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் பஸ் நிலையம் முன்புறம் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் உள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்தின் மையப்பகுதியில் பஸ்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியின் அருகில் உள்ள கட்டிடத்தின் மேல் புறத்தில் விளம்பர போர்டுகள் வைப்பதற்காக இரும்பு தூண்களால் ஆன ஆங்கிள்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பல ஆண்டுகளாக விளம்பர பேனர் எதுவும் வைக்கப்படாமல் தன்னந்தனியாக ஆபத்தான நிலையில் இரும்பு தூண்கள் துருபிடித்த நிலையில் உள்ளது. இதனை பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்


Next Story