சாலையோர கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை


சாலையோர கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
x

சாலையோர கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

காரையூர்:

புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் இருந்து ஆலம்பட்டி, கீழத்தானியம் வழியாக மேலத்தானியம் செல்வதற்கு காரையூர் காரை கண்மாய் வழியாக சாலை செல்கிறது. இந்த பகுதியில் சாலையோரங்களில் இருபுறமும் அதிக அளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. சாலை வரை வளர்ந்துள்ள கருவேல மரக்கிளைகளால் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story