காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க கோரிக்கை


காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க கோரிக்கை
x

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனருக்கு குளித்தலை சட்டமன்ற எம்.எல்.ஏ. மாணிக்கம் கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளார். அந்த மனுவில், குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வழங்குவதற்காக தோகைமலை கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில் ரூ.52 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2014-ம் ஆண்டு நிர்வாக அனுமதி பெற்று பணிகள் தொடங்கப்பட்டன.

2020-ம் ஆண்டே பணிகள் முடிந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டுங்கள் ஆகிய நிலையில் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் இன்னும் வழங்கப்படவில்லை. குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story