சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இளையான்குடி அருகே அரியாண்டிபுரம் கிராம பள்ளிச்சாலை முதல் சிறுபாலை கிராமம் வரை சுமார் 4.2. கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து வருகிறது. அவ்வப்போது செம்மண் பரப்பிய நிலையில் கிராம சாலை பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதற்கு மேல் தார் சாலை அமைக்க வேண்டும். ஆனால் வரும் மழைக்காலத்தில் கனமழை பெய்தால் செம்மண் சாலை மழை வெள்ளத்தால் அடித்துச் செல்ல வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் பணிகள் முடித்துக் கொடுக்கப்பட வேண்டும் என ஒப்பந்ததாரர் தகவல் பலகை வைத்துள்ளார். ஆனால் பாதி பணிகள் முடிவடையாத நிலையில் முழுமையான பணி எப்பொழுது முடியும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த சாலை அமைக்கப்படாததால் அரியாண்டிபுரம் பள்ளி மாணவர்கள், இளையான்குடி மற்றும் சாலைக்கிராமம் செல்லும் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அரியாண்டிபுரம், சிறுபாலை, மேல குடியிருப்பு, நடு குடியிருப்பு, சிறுபாலை காலனி, சிறுபாலை புது காலனி ஆகி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.