தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர கோரிக்கை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் உழைப்பாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் நிறுவன தலைவர் ராமகோபால தண்டாள்வர் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் தேக்கமலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு புறம்போக்கு கல்குவாரிகள் அனைத்தையும், கூட்டுறவு சங்கம், மகளிர் சுய உதவி குழு, மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி குத்தகைக்கு விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் போயர் சமுதாய மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், கல்லுடைக்கும் தொழிலாளர் நல வாரியம் அரசு உருவாக்க வேண்டும், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பதவியை போயர் சமுதாய மக்களின் பிரதிநிதிக்கு வழங்க வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கட்சி பொதுச்செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.