விவசாயிகளை பாதுகாக்க கோரிக்கை
விவசாயிகளை பாதுகாக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், குவாகம் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் உளுந்து, கடலை, நெல் உள்ளிட்ட பயிர்களை அக்கிராம விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். முப்போகமும் விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில் கொடுக்கூர், இடையக்குறிச்சி உள்ளிட்ட பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாடுகள் தங்களது விவசாய பயிர்களை இரவு நேரங்களில் வேலியைத் தாண்டி வந்து சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து அக்கிராமத்திற்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தண்டோரா மூலமும் முறையிட்டோம். ஆனால் இதுவரை அப்பகுதி மக்களோ, ஊராட்சிமன்ற தலைவரோ நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாதுகாக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story