தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் பெரம்பலூர் -மானாமதுரை, திருச்சி - சிதம்பரம் செல்லும் 2 தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழே உள்ள சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் தற்காலிக உணவகங்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. அங்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சாப்பிடுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story