புகழூர் வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புகழூர் வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் காரணாம்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து புகழூர் வாய்க்கால் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக என். புதூர் வரை செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு புகளூர் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வாய்க்காலில் ஆங்காங்கே கிடந்த தண்ணீர் தாமரைகள் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள் தண்ணீரில் மிதந்து வந்து பாலத்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் தேங்கி நிற்கிறது.
இதனால் வாய்க்காலில் செல்லும் தண்ணீர் தாராளமாக செல்ல முடியாமல் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.