ஆசிரியர் தகுதி தேர்வு - பணி ஆணை கோரி ஆர்ப்பாட்டம் ...!


ஆசிரியர் தகுதி தேர்வு - பணி ஆணை கோரி ஆர்ப்பாட்டம் ...!
x

சென்னை, வள்ளூவர் கோட்டத்தில் ஆசிரியர் பணி வழங்க கோரி டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

சென்னை,

சென்னை, வள்ளூவர் கோட்டத்தில் ஆசிரியர் பணி வழங்க கோரி டிஎன்டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை விரைந்து வழங்ககோரியும், மறுநியமன போட்டி தேர்வு விதியை நீக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிஎன்டெட்டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து விடும். உடனடியாக அரசு எங்கள் போராட்ட குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையெனில் இது தொடர் போராட்டமாக மாற்றப்படும். ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தான் கல்வித்தரம் கீழே சென்றுள்ளது. போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளில் எப்படி மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்? என கேள்வி எழுப்பினர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. மநீம கட்சியை தொடர்ந்து பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு அளித்தார்.


Related Tags :
Next Story