ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாணவர் சங்க மாவட்ட தலைவர் சுந்தரவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பழனி, துணை தலைவர் வெங்கடேசன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சின்னராசு, துணை செயலாளர் டார்வின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், அனைத்து துறைகளுக்கும் மாவட்ட அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும், அரசு சட்ட கல்லூரி, பொறியியல் கல்லூரி, விவசாய ஆராய்ச்சி கல்லூரி அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் பகுதியில் இயங்கும் அரசு கல்லூரிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும், கள்ளக்குறிச்சி ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் உத்திரகோட்டி, நர்மதா மற்றும் நிர்வாகிகள் பிரபாகரன், முரளி, தங்கராசுஹரி, வேலா, தீபன்ராஜ், சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story