ஜனநாயக மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்


ஜனநாயக மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்
x

கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருக்கடையூரில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருக்கடையூரில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கடை வீதியில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய தலைவர் சண்முகவள்ளி தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் குணசுந்தரி, மாநில துணைத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட செயலாளர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் ஒன்றிய செயலாளர் ராணி, ஜனநாயக மாதர் சங்க பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், சிலிண்டருக்கு மாலை அணிவித்து பாடையில் வைத்து ஒப்பாரி வைத்தனர்.

ஜி.எஸ்.டி. வரி

கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வை கண்டித்தும், 100 நாள் சம்பளத்தை அரசு அறிவித்த ரூ.281 ரூபாயை குறைக்காமல் வழங்க வேண்டும்.100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். திருக்கடையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள கட்டண கழிவறையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story