ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 5 வீடுகள் இடிப்பு


ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 5 வீடுகள் இடிப்பு
x

ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 5 வீடுகள் இடிக்கப்பட்டது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் முதலியார் தெருவில் உள்ள லட்சுமி பெருமாள் கோவில் பின்புறம் பேரூராட்சிக்கு சொந்தமாக 88 சென்ட் நிலம் உள்ளது. இதில், அரசு துணை சுகாதார நிலையத்தை சுற்றி அரசுக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து 5 குடும்பத்தினர் வீடு கட்டி இருந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்கப் போவதாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை பேரூராட்சி செயல் அலுவலர் யுவராணி தலைமையிலான அதிகாரிகள் 5 வீடுகளையும் அகற்றுவதற்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதைெயாட்டி அந்த பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story