கோர்ட்டு கட்டிடம் இடித்து அகற்றம்
கோர்ட்டு கட்டிடம் இடித்து அகற்றம்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து 3,254 சதுர மீட்டரும், அரசிடம் இருந்து 6,836 சதுர மீட்டரும் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.33 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இது தவிர ரூ.34 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு இடையூறாக பொள்ளாச்சி ஜே.எம்.-1 கோர்ட்டு, சப்-கோர்ட்டு, மாவட்ட உரிமையியல் கோர்ட்டு கட்டிடங்கள் இருந்தது. இதனால் கோர்ட்டுகள் வேறு கட்டிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து பழைய கோர்ட்டு கட்டிடங்கள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
Related Tags :
Next Story