ஏரிக்கரை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு அகற்றம்
குப்பம் கிராமத்தில் ஏரிக்கரை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு அகற்றப்பட்டது.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
கணணமங்கலம் அருகே குப்பம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை மீது வெற்றிவேல் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வந்தார்.
இதுகுறித்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
அப்போது போளூர் மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சம்பத், கண்ணமங்கலம் இளநிலை மின் பொறியாளர் சிலம்பரசன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story