ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்


ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்

கோயம்புத்தூர்

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் கடைகள் வைத்து இருப்பவர்கள் ஆக்கிரமித்து ஷெட் அமைத்து உள்ளனர்.

இதனால் பாதசாரிகள் நடைபாதை வழியாக செல்ல முடியாமல், சாலைகளில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட வாய்ப்பு ஏற்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் 80 அடி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மொத்தம் 100 கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story