ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு அகற்றம்


ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு அகற்றம்
x

அரக்கோணம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றப்பட்டது.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் கிராமத்தில் ஓடை பகுதியில் அதேப் பகுதியை சேர்ந்த கவுரி என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பது தாசில்தார் சண்முகசுந்தரத்திற்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவரது தலைமையில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சென்று ஆக்கிரமித்து கட்டியிருந்த வீட்டை இடித்து அகற்றினர்.


Next Story