பழமையான நீர்த்தேக்க தொட்டி இடிப்பு


பழமையான நீர்த்தேக்க தொட்டி இடிப்பு
x
தினத்தந்தி 21 July 2023 12:30 AM IST (Updated: 21 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே பழமையான நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் யூனியன் திப்பணம்பட்டி ஊர் மைதானம் அருகில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்திருந்தது. சுமார் 37 ஆண்டுகள் பழமையான இந்த தொட்டியின் தூண்கள் அனைத்தும் வலுவிழந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அதனை அப்புறப்படுத்தி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டுமென பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அந்த தொட்டி பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளதாக பஞ்சாயத்து நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story