ரெயில் நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடக்கம்


ரெயில் நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 25 Aug 2023 1:30 AM IST (Updated: 25 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 33 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பொள்ளாச்சி ரெயில் நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கி உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 33 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பொள்ளாச்சி ரெயில் நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கி உள்ளது.

ரெயில் நிலையம்

பொள்ளாச்சியில் கடந்த 1915-ம் ஆண்டு ரெயில் நிலையம் தொடங்கப்பட்டது. அங்கு கடந்த 2009-ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகற்றி, அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரெயில் நிலையம் தொடங்கி நூற்றாண்டை கடந்தும் எந்தவித வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை என்று புகார் எழுந்தது.

மேம்பாட்டு பணிகள்

இந்த நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, அங்கு கிடந்த மீட்டர் கேஜ் ரெயில்பாதை இருந்தபோது பயன்படுத்திய தண்டவாளங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் ரெயில் நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன முறையில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்காக மேற்கூரைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி உடன் டிக்கெட் மற்றும் முன்பதிவு டிக்கெட் எடுக்கும் மையம் மாற்றப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் திரைகள்

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிக்கு ரூ.6 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ரெயில் நிலைய மேற்கூரை அகற்றப்பட்டு, பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு புதிய கட்டிட பணிகள் தொடங்கப்படும். குறிப்பாக பயணிகளுக்கான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறைகள், சுத்தமான குடிநீர், ரெயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்த டிஜிட்டல் திரைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story