ஈரோடு கனி மார்க்கெட்டில் தற்காலிக கடைகள் இடித்து அகற்றம்


ஈரோடு கனி மார்க்கெட்டில் தற்காலிக கடைகள் இடித்து அகற்றம்
x

ஈரோடு கனி மார்க்கெட்டில் தற்காலிக கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

ஈரோடு

ஈரோடு கனி மார்க்கெட்டில் தற்காலிக கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

கனி மார்க்கெட்

ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளிச்சந்தை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.54 கோடி செலவில் 4 தளங்களுடன் புதிய வணிகவளாகம் கட்டும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனால் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஜவுளி கடைகள் அகற்றப்பட்டன. அப்போது அதன் அருகிலேயே ஜவுளி வியாபாரிகளுக்காக தற்காலிக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டன.

கடந்த ஆண்டு புதிய வணிக வளாகம் திறக்கப்பட்டது. ஆனால் அதிக வாடகை நிர்ணயிக்கப்பட்டதாக கூறி வியாபாரிகள் கடைகளை ஏலம் எடுக்காததால் வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

இடித்து அகற்றம்

இந்த நிலையில் புதிய வணிக வளாகத்தை சுற்றியுள்ள தற்காலிக கடைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதனால் கடைக்காரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர்களது கோரிக்கையை ஏற்று மகிமாலீசுவரர் கோவிலுக்கு பின் பகுதியில் ஜவுளி கடைகள் அமைத்து கொடுக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் கனி மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளை வியாபாரிகள் காலி செய்தனர். அவர்களது பொருட்களை மாற்று இடத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அங்குள்ள கடைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலமாக 'தகர செட்' முழுவதும் இடித்து அகற்றப்பட்டது.


Next Story