நித்யானந்தா தோற்றத்தில் இருந்த சாமியாரின் ஆசிரமம் இடிப்பு


நித்யானந்தா தோற்றத்தில் இருந்த சாமியாரின் ஆசிரமம் இடிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2022 4:41 AM GMT (Updated: 2022-10-04T11:32:14+05:30)

நித்யானந்தா என நினைத்து, அவரது தோற்றத்தில் இருந்தவரின் ஆசிரமத்தை இடித்து சேதப்படுத்தியதாக, பல்லடம் காவல் நிலையத்தில் பாஸ்கரானந்தா நேற்று புகார் அளித்தார்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்துக்கு நேற்று சொகுசு காரில் நித்யானந்தா தோற்றத்தில் சாமியார் ஒருவர் வந்தார். அவர் பெயர் பாஸ்கரானந்தா. கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அங்கு கட்டப்பட்டு வந்த ஆசிரமத்தில் இருந்த தனது அறையில், 25 பவுன் தங்க நகைகள் காணாமல்போனதாக பல்லடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த வாரம் பாஸ்கரானந்தா புகார் அளித்தார்.

இதற்கிடையே வெளியூர் சென்றிருந்த பாஸ்கரானந்தாவுக்கு ஆசிரமக் கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பதாக, தகவல் அளிக்கப்பட்டது.

ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்லடம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.


Next Story