ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர்
காரியாபட்டி,
திருச்சுழி அருகே உள்ள பண்ணைமூன்றைடைப்பு ஊராட்சியில் எர்ரம்பட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் அடைக்கலம் தலைமை தாங்கினார். திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட விவசாய தொழிளார் சங்க மாவட்ட தலைவர் மருதுபாண்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டகுழு இளங்கோ ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஒன்றியதுணை செயலாளர் பெரியண்ணன், ரவிந்திரகாளிதாஸ், முருகன், ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story