சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு ஆர்ப்பாட்டம்


சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு ஆர்ப்பாட்டம்
x
சேலம்

சேலம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், பொதுசிவில் சட்டத்தை கைவிடக்கோரியும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சேதுமாதவன் தலைமை தாங்கினார். சேலம் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி அன்வர், சேலம், நாமக்கல், தர்மபுரி முத்தவல்லி சங்க தலைவர் அமான் என்கிற நாசர் கான், ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி பிரவீன்குமார் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story