ஓசூரில்தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஓசூரில்தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மணிப்பூர் வன்முறையை கண்டித்தும் ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் சபரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் காவேரி, சிவசங்கர், கல்பனா மகேந்திரா, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் காதர் பாஷா வரவேற்றார். இதில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஜோதி குமரவேல், சுடலை, மாரிமுத்து, கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மேற்கு மாவட்ட பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.


Next Story