கிருஷ்ணகிரியில்தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில்தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் எஸ்.எம். முருகேசன், மாநகர் மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி, மாநில விவசாய அணி துணை செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தி.மு.க., ஆட்சிப்பொறுப்பேற்று இரண்டாண்டு ஆகியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவித்தனர். ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது பல்வேறு கட்டுப்பாடு, விதிமுறைகள் வகுத்து யாருக்கும் கிடைக்காத வகையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக ஏமாற்றுகிறார்கள். இதனால் தி.மு.க. ஆட்சியை அகற்றவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் கூட்டணியை தோற்கடிக்கும் வகையில் நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று பேசினார். தொடர்ந்து தே.மு.தி.க., வினர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்கள். இதில் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் சின்னராஜ், பொருளாளர் ஓம்சாந்தி சங்கர், மேற்கு மாவ்ட அவைத் தலைவர் மாதையன், ஓசூர் மாநகராட்சி அவைத் தலைவர் சரவணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ஜிரவேல், மேற்கு மாவட்ட பெருளாளர் தனபால், ஓசூர் மாநகராட்சி பொருளாளர் அறிவழகன், நகர செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story