தர்மபுரியில்தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரி கிழக்கு, மேற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேப்டன் விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் ராஜசந்திரசேகர் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் வரவேற்று பேசினார். மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் சங்கர் முன்னிலை வகித்தார். அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கிட வேண்டும். காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நதிநீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். விலை நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நிலம் வழங்கக்கூடாது. விவசாய நிலங்களை விலை நிலங்களாக மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசின் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கேப்டன் மன்ற துணைச்செயலாளர் மாரிமுத்து, மாவட்ட அவைத்தலைவர்கள் தங்கவேல், உதயகுமார், மாவட்ட பொருளாளர்கள் சீனிவாசன், டாக்டர் ராமச்சந்திரன், கிழக்கு மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ், பெரியசாமி, தங்கதுரை பொன்மொழி, மேற்கு மாவட்ட துணை செயலாளர்கள் மணி முனியப்பன், விஜயகாந்த், நாகராஜ், இந்திராணி, மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகர செயலாளர் தேவதேவன் நன்றி கூறினார்.


Next Story