ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே பாலம் அமைக்கும் பணியினை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தங்கினார். துணைத்தலைவர்கள் நாராயணன், ஆழ்வார்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் தமிழ்மாநில ஒருங்கிணைப்பு குழுவின் விருதுநகர் மாவட்ட தலைவர் சந்திரராஜன், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் விருதுநகர் மாவட்ட செயலாளர் சிவ பெருமான், ஓய்வு பெற்ற ஆசிரியர் வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட துணைத்தலைவர் பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பிச்சுமணி நன்றி கூறினார்.