கோவில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சங்ககிரியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சங்ககிரி
சங்ககிரி அருகே மோரூர் மேற்கு ஊராட்சி வேங்கிபாளையம் நாடார்தெரு, மக்களுடைய மயானம் செல்லும் பாதையை வழிவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வேங்கிபாளையம் மயானத்திற்கு செல்லும் பாதையை மறித்து தடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற ேவண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து உதவி கலெக்டர் லோகநாயகியிடம் நிாவாகிகள் சின்னுசாமி, முத்துசாமி, சண்முகம், புஷ்பராஜ் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.