ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

ஆர்ப்பாட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் காரியாபட்டி தாலுகா குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாரியம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ரத்தினம், செயலாளர் மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். 100 நாள் வேலையில் முறைகேடுகளை தடுத்து, முழு வேலை முழு ஊதியம் வழங்க வலியுறுத்தி இந்த ஆர்்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story