பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கவாஸ்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமகேசவன், பொருளாளர் காதர் மொய்தீன் உள்பட பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி உள்பட 8 துறைகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வருவதால் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story