வேப்பனப்பள்ளியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளியில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் மணிப்பூர் சம்பவம், மேகதாது அணை மற்றும் நீட் தேர்வு சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தோழமை கட்சிகளான த.மு.மு.க. மாவட்ட தலைவர் நூர்முகமது, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் சனாவுல்லா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, மணிப்பூர் சம்பவம், மேகதாது அணை மற்றும் நீட் தேர்வு சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் கணேசன், துரைகுட்டி, சின்னபையன், ஜெயராமன், வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story