கருப்பூர், தலைவாசல் நத்தக்கரை பகுதிகளில்சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


கருப்பூர், தலைவாசல் நத்தக்கரை பகுதிகளில்சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
சேலம்

கருப்பூர்

கருப்பூர், தலைவாசல் நத்தக்கரை பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுங்க கட்டணம்

சேலம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் தே.மு.தி.க. மாநகர் மாவட்டம், கிழக்கு மாவட்டம் ஆகியவற்றில் சார்பில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து முற்றுகை போராட்டம் நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார். இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.

இந்த முற்றுகை போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வநேசன், தலைவர் செல்வகுமார், மாநகர துணை செயலாளர் ராஜி சுகுமார், பொதுக்குழு உறுப்பினர் நாராயணன், அஸ்தம்பட்டி பகுதி ராஜா, செவ்வாய்பேட்டை தக்காளி ஆறுமுகம், அம்மாபேட்டை செல்வகுமார், சூரமங்கலம் காத்தவராயன், பன்னீர்செல்வம், மாநகர மகளிர் அணி செயலாளர் பிரபா, ஒன்றிய கிழக்கு மாவட்ட பொருளாளர் கருப்பூர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

தலைவாசல் நத்தக்கரை

இதே கோரிக்கையை வலியுறுத்தி, தலைவாசலை அடுத்துள்ள நத்தக்கரை சுங்கச்சாவடி எதிரில் சேலம் கிழக்கு மாவட்ட ேத.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் கொங்கு கணேசன் தலைமை தாங்கினார். தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராசு, தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரும், உயர் மட்டக்குழு உறுப்பினருமான ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும் பேசினார்.

இதில், ஆத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், கெங்கவள்ளி ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரன், முத்தையன், ஆத்தூர் நகர செயலாளர் இன்பவேல், நரசிங்கபுரம் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாநில போக்குவரத்து தொழிற்சங்க துணைத்தலைவர் ராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story