கிருஷ்ணகிரியில்நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில மையம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 22 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். கோட்ட துணைத்தலைவர் செந்தில்பிரபா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட பொருளாளர் மோகன், சிங்காரவேலன், பெருமாள், நந்தகுமார், வெங்கடேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நில அளவைத்துறையில் வெளி முகமை மூலம் புல உதவியாளர்களை நியமிக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும். திட்ட பணியில் உள்ள ஊழியர்களுக்கான மாவட்ட மாறுதல், பதவி உயர்வு வழங்காமல் உள்ள துணை ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். பணிச்சுமை தொடர்பாக நெருக்கடிகளை குறைத்து சுமூகமான பணி சூழலை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.