ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

மாற்றுத்திறனாளிகள்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாநிலச்செயலாளர் ஜீவா உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பேசினர். மாற்றுத்திறனாளிகள் பயிலும் பள்ளிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாத மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், தொண்டு நிறுவனங்கள், உதவி பெறும் பள்ளிகள், மனநல காப்பகங்களில் ஆய்வு செய்ய வேண்டும், 2022-2023, 2023-2026-ம் ஆண்டுக்கான நிதியினை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அதில் எங்கள் சங்கத்தையும் இணைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


Next Story