விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரிசேலத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரிசேலத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி சேலத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம்

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜீவானந்தம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை உணர்த்தும் வகையில் சிலர் கையில் சான்றிதழுடன் தரையில் அமர்ந்து வேலைக்காக காத்திருப்பது போன்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story