கிருஷ்ணகிரியில்அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில்அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கிருஷ்ணகிரியில் அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தலைமை தபால் அலுவலகம் முன்பு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. மாநில உதவி செயலாளர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். கோட்டத்தலைவர் லோகநாதன், கோட்ட பொருளாளர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி பென்சன் உள்ளிட்ட இலாகா ஊழியர் அந்தஸ்தை வழங்க வேண்டும். 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, பணிக்கொடை 5 லட்சம் ரூபாய், குரூப் இன்ஸ்சூரன்ஸ் 5 லட்சம் ரூபாய், மருத்துவ காப்பீடு முதலியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். மாவட்டம் முழுவதும் நேற்று 500-க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story