கிருஷ்ணகிரி, ஓசூரில்தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி, ஓசூரில்தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
x

கிருஷ்ணகிரி, ஓசூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, ஓசூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாரத்தலைவர் ஹென்றி பவுல்ராஜ் தலைமை தாங்கினார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன், மாவட்ட துணைச்செயலாளர் மரிய சாந்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசபெல்லாராணி, மாவட்ட மகளிர் அமைப்பு செயலாளர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கோரிக்கைகள் குறித்து குழு அமைப்பது, குழு அறிக்கைக்கு அவகாசம் வழங்குவது என கால நீட்டிப்பு செய்யாமல் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் வட்டார பொருளாளர் சாதிக் உசேன் நன்றி கூறினார்.

ஓசூர்

ஓசூரில், ஒன்றிய அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் பவுன்துரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கோபி வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவர் பிரசாத், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் தசரத ராமிரெட்டி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் ஜனார்த்தனா, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் வட்டார செயலாளர் நாகராஜன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாக பிரசாத் நன்றி கூறினார்.


Next Story