தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில்பஞ்சமி நிலத்தை மீட்க கோரி ஐஸ் சாப்பிட்டு ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில்பஞ்சமி நிலத்தை மீட்க கோரி ஐஸ் சாப்பிட்டு ஆர்ப்பாட்டம்
x

தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பஞ்சமி நிலத்தை மீட்க கோரி சேலத்தில் ஐஸ் சாப்பிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சேலம்

சேலம்

தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தலைமை தாங்கினார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி, இணை ஒருங்கிணைப்பாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும், போலி ஆவணங்கள் தயாரித்து பத்திர பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக கொடுக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், கோரிக்கைகள் ஐஸ் போல் கரைந்து போவதாக கூறி அனைவரும் ஐஸ் சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story