சீமானை கண்டித்து சேலத்தில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


சீமானை கண்டித்து சேலத்தில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

சீமானை கண்டித்து சேலத்தில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதாக கூறி அதை கண்டித்து சேலத்தில் இளைஞர் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் கரன்சிங், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் அரவிந்த், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சீமானை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீமான் உருவப்படத்தை கிழித்தனர். அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதில் இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வரதராஜ், சிவக்குமார், சாந்தமூர்த்தி, விஜயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story