கலைவாணர் பெயர் வைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


கலைவாணர் பெயர் வைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்துக்கு கலைவாணர் பெயர் வைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்துக்கு கலைவாணர் பெயர் வைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் வடசேரியில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே கட்டப்பட்டு உள்ளது. அங்கு ஏற்கனவே இருந்த கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய கட்டிடத்துக்கு கலைஞர் மாளிகை என்று பெயர் சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த கட்டிடத்துக்கு கலைவாணர் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளாளர் இளைஞர் பேரவை மற்றும் தென்னக மக்கள் இயக்கம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தென்னக மக்கள் இயக்க நிறுவனர் அய்யப்ப கார்த்திக் தலைமை தாங்கினார். வெள்ளாளர் இளைஞர் பேரவை செயலாளர் சி.டி.பிள்ளை முன்னிலை வகித்தார். எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். குமரி மாவட்ட வெள்ளாளர் சங்கம் சார்பில் தாணப்பன், பா.ஜனதா வர்த்தகர் அணி மாநில செயலாளர் சுபாஷ், குமரி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் முத்துகருப்பன், பொன்நீலகுமார், ராஜா, நாஞ்சில் ராஜா, வக்கீல் ராஜகோபாலன், கோலப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.


Next Story