ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

சேத்தூர் பஸ் நிலையம் அருகில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பஸ் நிலையம் அருகில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பரசுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில தொழிற்சங்க துணைப்பொதுச்செயலாளர் காதர் மைதீன், மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வேல்முருகன், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி, சேத்தூர் ம.தி.மு.க.வினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சேத்தூரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story