அய்யப்ப சேவா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் அய்யப்ப சேவா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட அய்யப்ப சேவா சங்கம் சார்பில் இந்து கடவுள்களை இழிவு படுத்தும் போக்கை கண்டித்தும், இந்து கடவுள்களை இழிவு படுத்தி வரும் பல்வேறு அமைப்புகளை கண்டித்தும் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ராஜமாணிக்கம் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். அய்யப்ப சேவா சங்க தென் பாரத தலைவர் துரை சங்கர், பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர், ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் சந்திரசேகர், இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் ராஜி, அய்யப்ப சேவா சங்க மாநில துணைத்தலைவர் சுவாமி ரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அய்யப்ப சேவா சங்க உறுப்பினர்கள், பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.